தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
அடுத்த வாரம் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டியை அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் விசித்ரா 13 லட்சத்துடன் வெளியேறியதாக நேற்று தகவல் பரவியது. அதேபோல் மாயாவும் பணப்பெட்டியை எடுத்ததாக தகவல் பரவிய நிலையில் இவை இரண்டும் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பணத்தை எடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த பூர்ணிமா 16 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
எப்படியும் இந்த வாரம் மக்களால் வெளியேற்றப்பட இருந்த பூர்ணிமா பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியது புத்திசாலித்தனம் தான் என பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram