தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர்.
அந்தப் பேட்டியில் படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைக்க என்ன காரணம் என பூஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் என்னவென்றால், படத்தில் விஜய் வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு மிகவும் அமைதியான கதாபாத்திரம். அப்படி இருக்கும் நபர் ஒரு கட்டத்தில் அவருக்குள் இருக்கும் பீஸ்ட் வெளியே வரும்.
பத்து செகண்டுக்கு முன்பு இந்த மனுஷன் இப்படி இல்லையே என யோசிக்கத் தோன்றும் வகையில் விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும். அதன் காரணமாகவே இந்த படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைக்கப்பட்டதாக பூஜா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அமைதியாக இருக்கும் விஜய் ஒருகட்டத்தில் ஆக்ரோஷமான மனிதராக எப்படி மாறுகிறார்? ஏன் இந்த மாற்றம் என்பதெல்லாம் படத்தின் கதை களமாக இருக்கும் என தெரிகிறது.
