சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த பூஜா ஹெக்டே

முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு சினிமா பற்றி இவர் சொன்ன கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில், தெலுங்கு சினிமாவில் பெண் கதாபாத்திரங்களைக் காட்சிப் பொருளாக்குவது குறித்து பூஜா ஹெக்டேவிடம் கேட்கப்பட்டது.

அவர் நடித்த ‘அலா வைகுந்தபுரமுலோ’ திரைப்படத்தின் காட்சியையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டனர். இதற்குப் பதிலளித்த பூஜா, “தென்னிந்திய சினிமாக்களுக்கு இடுப்புப் பகுதியின் மீது மோகம் இருப்பது உண்மைதான்.

ஆனால், ஒரு ஆண் எனது இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவாயில்லை’ என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவைப் பற்றி பூஜா ஹெக்டே தவறாகப் பேசிவிட்டதாகவும், அவருக்குத் தொடர் வாய்ப்புகள் அளிக்கும் தெலுங்குத் திரைத்துறையைப் பழித்துப் பேசுவதாகவும் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். இதனால் பூஜா ஹெக்டே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘நான் பேசிய விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. நான் சொன்னவற்றைத் திரிக்கலாம். ஆனால், தெலுங்குத் திரைத்துறை மீது எனக்கிருக்கும் அன்பைத் திரிக்க முடியாது. தெலுங்குத் திரைத்துறையே எனது உயிர் மூச்சு. எனது படங்களை விரும்பும் என் ரசிகர்களுக்குக் கூட இது தெரியும். தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை”. இவ்வாறு அவர் கூறியுள்ளார். அடுத்து பூஜா அகில் அக்கினேனியுடன், ‘பொம்மரில்லு’ புகழ் பாஸ்கர் இயக்கத்தில் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ படங்களில் நடிக்கிறார். மேலும், பிரபாசுக்கு ஜோடியாக ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்திலும் நடிக்கிறார்.

Suresh

Recent Posts

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

7 hours ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

7 hours ago

தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா? – கஸ்தூரி ராஜா ஆவேசம்

72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…

7 hours ago

பிறந்தநாளில் தனது 5 ஆண்டு கனவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…

7 hours ago

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…

7 hours ago

The India Story Official Trailer

The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…

1 day ago