Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அரபிக் குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே மாதிரியே நடனமாடிய சமந்தா.. பூஜா ஹெக்டே சொன்ன பதில்

Pooja Hegde Coment to Samantha Arabic Kuthu Dance

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இருவரும் இணைந்து நடனமாடிய இருந்த அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இதை பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சமந்தாவும் ஏர்போர்ட்டில் இந்த பாடலுக்கு பூஜா ஹெக்டே போட்ட ஸ்டெப்பை போட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Amazee என பதிவு செய்துள்ளார்.

பூஜா ஹெக்டேவின் இந்த பதிவால் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்கள் இடையே இருந்து வந்த மனக்கசப்பு மாறியுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு அப்படி ஒன்றும் அழகில்லை என பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின்னர் பூஜா ஹெக்டே தன்னுடைய கணக்கு ஹேக் செய்யபட்டு இப்படி ஒரு பதிவு பதிவானதாக விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் இதனை ஏற்க மறுத்து வந்த நிலையில் தற்போது இவர் பதிவு செய்துள்ள பதிவால் அந்த மனக்கசப்பு மறைந்துள்ளது.

Pooja Hegde Coment to Samantha Arabic Kuthu Dance
Pooja Hegde Coment to Samantha Arabic Kuthu Dance