ponniyin-selvan-released-new-poster
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான பொன்னியின் செல்வன் கதை களத்தை அதே தலைப்போடு பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம். மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
அண்மையில் இப்படத்தில் போஸ்டர்ஸ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை புதிய போஸ்டருடன் லைக்கா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதேபோல் மீண்டும் ஒரு சூப்பரான அப்டேட்டை பட குழு தெரிவித்து இருக்கிறது. அதாவது இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் பார்த்திபன் குறித்த போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அப்போஸ்டரில் “சோழர் பெருமையின் அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும்” என்று குறிப்பிட்டு, சரத்குமார்’பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்திலும், பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர் பாத்திரத்திலும் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…