மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்களை பட குழு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது அடுத்த பாடலுக்கான தகவலை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் இப்படத்தின் அடுத்த பாடலான சோழ சோழ என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற புதிய தகவலை போஸ்டருடன் வெளியிட்டு இருக்கிறார்.
#CholaChola the next single from #PS1 releasing tomorrow at 6PM! #PonniyinSelvan #ManiRatnam @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/Enhe5myVTR
— A.R.Rahman (@arrahman) August 18, 2022

