Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்.!!

ponniyin selvan 2 release date update viral

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். அவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடியை வசூல் செய்திருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்தில் 200 கோடியை வசூலித்த முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடியை தாண்டி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இப்படத்தின் 2 ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் 2023 தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரிவபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ponniyin selvan 2 release date update viral
ponniyin selvan 2 release date update viral