தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் மணிரத்தினம். இவர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
அதன் வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமான பிரமோஷன் களுடன் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இருப்பினும் ஓரளவு வசூல் வேட்டையாடி வரவேற்பை பெற்றிருந்த இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி தற்போது பிரபல ஓடிடி தலமான அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
step into the world of grandeur and intrigue as this epic saga continues! ????#PS2onPrime, watch now
Available in Tamil, Telugu, Kannada and Malayalamhttps://t.co/6lYhjbXDZJ pic.twitter.com/DTUFwPQRky— prime video IN (@PrimeVideoIN) June 1, 2023

