தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பொன்னி. இந்த சீரியலில் ராஜா ராணி 2 சீரியல் புகழ் சுந்தர் நாயகியாக நடிக்க சபரி ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் சீரியலில் முக்கிய கேரக்டரில் ஒன்றான ஜெயலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சமீதா நடித்து வந்தார். திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக சிந்துஜா விஜி என்பவர் நடித்து வந்தார்.
இந்த நிலையில் உடல் நல குறைபாடு காரணமாக அவரும் இது சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இனி இந்த சீரியல் ஜெயா என்ற கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இருந்து வெளியேறிய ரெஹானா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் ரெகானாவின் காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram