Tamilstar
Health

பெண்களுக்கு தோழியாய் இருக்கும் மாதுளை.

Pomegranate is a friend of women.

பெண்களுக்கு மாதுளை பழம் மிகவும் சிறந்த உணவாக இருக்கிறது.

அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று மாதுளை. இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

குறிப்பாக பெரும்பாலும் அனைவரும் இதய நோயால் பாதிக்கப்படுவதுண்டு. பெண்கள் அதை தவிர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மாதுளை பழம் சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குவது முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோயைக் குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

முக்கியமாக பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்த மாதுளை பயன்படுகிறது. நோய்க்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் மாதுளை உபயோகிக்கலாம். தொடர்ந்து மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் பருக்களில் இருந்து விடுபட உதவும்.

கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு மாதுளை மிகவும் முக்கிய பழமாக கருதப்படுகிறது. மேலும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.