Police Fine in Actor Manoj Manju
பிரபல நடிகர் ஒருவர் போக்குவரத்து விதிமீறியதாக போலீசார் அவருக்கு அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு உள்ள கருப்பு பிலிம்களையும் நீக்கி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் இதில் தப்புவது இல்லை.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் கார் வாகன சோதனையில் சிக்கியது. அந்த காரில் கருப்பு பிலிம் இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் நடிகர்கள் அல்லு அர்ஜுன், கல்யாண்ராம் ஆகியோரின் கார்களிலும் கருப்பு பிலிம் இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் போக்குவரத்து விதிமீறலில் சிக்கி உள்ளார்.
மனோஜ் மஞ்சு காரில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரது கார் கண்ணாடியில் விதிகளை மீறி கருப்பு பிலிம் ஒட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து மனோஜ் மஞ்சுவுக்கு போலீசார் ரூ.700 அபராதம் விதித்தனர். கருப்பு பிலிமையும் கிழித்து எறிந்தார்கள்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…