Actor Balaji Wife Nithya About KamalHaasan
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளில் நடுவராக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி. சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரை பக்கம் சென்று செட்டில் ஆகிவிட்டார்.
ஏற்கனவே இவர் ஒரு திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக நித்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு போஷிகா என்ற மகளும் உள்ளார். இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களம் இறங்கி அவர்களை சேர்த்து வைக்க விஜய் டிவி முடிவு செய்தது. நிகழ்ச்சியின் இறுதியில் இருவரும் சேர்ந்து விட்டது போல காட்டப்பட்டாலும் தற்போது வரை பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாஜி தனது மகள் பற்றி பேச அதற்கு எச்சரிக்கை விடுத்து பதில் வீடியோவை வெளியிட்டிருந்தார் நித்தியா. இந்த நிலையில் பாலாஜி தன்னுடைய மனைவியின் பிடியில் இருந்து மகளை காப்பாற்றி என்னிடம் ஒப்படைக்குமாறு குழந்தைகள் நல காப்பகத்தில் புகார் அளித்திருந்தார். மகளை வைத்து தன்னை மிரட்டி தன்னிடம் பணம் பறிப்பதாக கூறியிருந்தார். இப்படியான நிலையில் இதற்கு நித்யா பதிலளித்துள்ளார்.
என்னுடைய தரப்பில் ஒரு நியாயம் இருக்கிறது அதை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளட்டும். மீடியா முன்பு பேசுவதால் எனக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது கமல்ஹாசன் அளித்த அறிவுரைகள் குறித்து கேட்டதற்கு வேண்டாம் என பேச வைக்காதீங்க என் வாழ்க்கையில் கமலை மாதிரி ஒரு மோசமான கேரக்டரை பார்த்தது கிடையாது என கூறியுள்ளார்.
தாடி பாலாஜி மனைவி நித்யா உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லான 25-வது படம் குறித்த முக்கிய…
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’…
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
Vengaatu Boomyil Lyrical Video | Black Gold | Vetri, Priyalaya | Gavaskar Avinash | Saindhavi