Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

pisaasu-2-movie-release-date-details

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் “பிசாசு 2”. இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழு அறிவித்துள்ளது. அதில் “பிசாசு 2” திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான தகவலை படக்குழு ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறது. இந்த தகவலை அறிந்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு அதனை வைரலாகி வருகின்றனர்.

pisaasu-2-movie-release-date-details
pisaasu-2-movie-release-date-details