Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் ஜென்டில்மேன் இவர்கள்தான்… பாவனியின் லேட்டஸ்ட் அப்டேட்

Pavni reddy About Gentleman in Bigg Boss5

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் இரு வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த போட்டியாளர்கள் மீண்டும் பழையபடி பழைய வாழ்க்கை வாழ தொடங்கியுள்ளனர். அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அதில் நடந்த சுவாரஸ்யங்கள் பற்றியும் பேட்டி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பவானி ரெட்டி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு முதல் முறையாக நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் ஜென்டில்மேன் என்றால் யாரை சொல்வீர்கள் என கேட்டதற்கு அவர் இருவரின் பெயரை கூறியுள்ளார்.

அதாவது சஞ்சீவ் நேர்மையாக விளையாடுவர். எல்லா விஷயத்துலயும் நேர்மையாகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்வார் என தெரிவித்துள்ளார். அவருக்கு அடுத்ததாக இமான் அண்ணாச்சி ஜென்டில்மேன் என தெரிவித்துள்ளார். அவர் யாரிடம் மனக்கசப்பு ஏற்பட்டாலும் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சாப்பிட்டீங்களா என முழு மனதோடு கேட்பார். அவர் காட்டியது உண்மையான பாசம் என பாவணி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் டைட்டில் வென்ற ராஜுவை ஜென்டில்மேன் என சொல்லவில்லை பாவணி. அதேபோல் ராஜூ அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு பாவனியை சுத்தமாக பிடிக்காது என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pavni reddy About Gentleman in Bigg Boss5
Pavni reddy About Gentleman in Bigg Boss5