தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருந்த “பத்து தல” திரைப்படம் கடந்த 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.
அண்மையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடிய படகுழுவினரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலானதை தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை படக்குழு போஸ்டருடன் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இப்படம் நேற்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
Welcome to the world of #AGR ????#PathuThala is now streaming @PrimeVideoIN
????https://t.co/DSYfxZ3CVK#PathuThalaOnPrime#Atman @SilambarasanTR_ @StudioGreen2 @kegvraja @PenMovies @jayantilalgada @Gautham_Karthik @arrahman @nameis_krishna @menongautham @priya_Bshankar pic.twitter.com/6P3VMdF6vX
— Studio Green (@StudioGreen2) April 26, 2023