pathu-thala-movie-audio-launch-update
கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடல் சிம்புவின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி இணையதளத்தை அதிர விட்டு வருகிறது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி நடைபெற இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் ரசிகர்களால் உற்சாகத்துடன் ட்ரெண்டிங்காகி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…
சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை…
விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…