கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அண்மையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நம்ம சத்தம் பாடல் தற்போது வரை இணையதளத்தை தெறிக்க விட்டு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருவதாகவும், அதில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் கலந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனருடன் பாடலாசிரியர் கபிலன், ஏ ஆர் ரகுமான் இணைந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
#PathuThala Second Single..⏳????♥️
Lyrics : Kabilan
Music : AR Rahman
Direction : Obeli N Krishna#SilambarasanTR | #GauthamKarthik
Promo Shoot On Progress..???????????? pic.twitter.com/2ubxKFJNbC— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 21, 2023