லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியை இப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) இரண்டாம் பாகமாக உள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதே நேரத்தில் இப்படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல்ஹாசன் சென்னை ஸ்லாங்கில் அனிருத் இசையில் பாடி அசத்தியிருந்த “பத்தல பத்தல” பாடல் இடம்பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியில் செம்மையாக வைரலாகி பட்டி தொட்டியெங்கும் ஆட்டம் போட வைத்த இப்பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் மாஸ் காட்டி வருகிறது. இந்த தகவலை ரசிகர்கள் உற்சாகத்துடன் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
Pathala Pathala song lyric video crosses 100M views????#KamalHaasan #Vikram #pathala pic.twitter.com/ZxFZCvx5tx
— Dinesh Udhay (@me_dineshudhay) December 15, 2022