Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியல் கிளைமாக்ஸில் பார்வதி கட்டியிருந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?வைரலாகும் புகைப்படம்

parvathy-saree-details-in-sembaruthi-climax update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. 1400 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியல் கிளைமாக்ஸ் இந்த வார ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த கிளைமாக்ஸ் எபிசோடில் பார்வதிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக பார்வதி பிரத்யேகமாக தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை அணிந்து ஜொலிக்க உள்ளார். இந்த புடவையின் மதிப்பு மட்டுமே 1 லட்சம் ரூபாய் என சீரியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

செம்பருத்தி கிளைமாக்ஸை 16 செக்மென்ட்டுகளாக ஜீ தமிழ் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பார்வதிக்கு இப்படி தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவ அணிந்து நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ‌

இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

parvathy-saree-details-in-sembaruthi-climax update
parvathy-saree-details-in-sembaruthi-climax update