விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘க/பெ ரணசிங்கம்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது.
இந்த படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ரூபம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் ‘ரூபம்’ படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பார்வதி நாயர் இந்த படத்தில் போலீசாக நடிக்க உள்ளார்.
நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நிலையில், பார்வதி நாயரும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரூபம் படத்தில் நடிக்கிறார்.
Here's the first look poster of my next film titled #Rubam as a Solo Lead! This is a very strong script & l'm really looking forward for the shoot✨@kjr_studios @thama1988 @proyuvraaj @gobeatroute pic.twitter.com/rgvc7ZNfCU
— Parvati (@paro_nair) December 3, 2020