இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், \”குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை (First look) குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை (20.01.2024) வெளியிடுவார்\” என்று குறிப்பிட்டு போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Good?
Afternoon friends pic.twitter.com/IXWXdbgKb1— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 19, 2024