தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பி பாசங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டு குடும்ப வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது.
இந்த சீரியலில் மூத்த அண்ணனாக மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்டாலின். இவருடைய சொந்த வாழ்க்கையில் கடந்தவாரம் இவருடைய பெரியம்மா உயிரிழந்தார். அவருடைய மறைவுச் செய்தியைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். பிறகு அந்தப் பதிவை ஸ்டாலின் நீக்கிவிட்டார்.
இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு இரங்கல் பதிவை பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தன்னுடைய மனைவியின் தாயார் நேற்று மரணம் அடைந்ததாகவும் அவருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இப்படி ஒரே வாரத்தில் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட இரண்டு மரணம் அவரது குடும்பத்தில் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


