Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. வைரலாகும் கிளைமேக்ஸ் சீன்

pandian-stores serial last-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இன்றோடு முடிவுக்கு வர வந்துள்ளது.

இன்றைய எபிசோடு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் எல்லோரும் கோவிலில் பொங்கல் வைக்க பார்வதியை வழக்கம்போல பிரச்சனை செய்ய வேண்டாம் என்று சொல்லி முல்லை அழைத்து வர அவரும் அதற்கேற்றார் போல நடந்து கொள்ள ஒவ்வொரு முறையும் தனத்தினம்மா பார்வதி நீ எதுவும் சொல்லலையா என கிளப்பி விட முயற்சி செய்ய கடைசியில் எதுவும் ஒர்க்அவுட் ஆகாமல் போகிறது.

ஜனார்த்தனன் திரும்பவும் சொத்துக்கள் அனைத்தையும் மாப்பிள பேருக்கு மாற்று எழுதி இருப்பதாக சொல்லி பத்திரத்தை கொடுக்க மூர்த்தி ஜீவா மீனா எடுக்கறது தான் கடைசி முடிவு என சொல்லி விடுகிறார். முதலில் பத்திரத்தை வாங்கும் ஜீவா பிறகு அதை ஜனார்த்தனன் இடம் கொடுத்து எந்த பிரச்சனையும் வந்தாலும் என்னை விட்டுக் கொடுக்காத உங்க பொண்ணு மீனா கிடைத்தது எனக்கு பெரிய சொத்து தான் என்று சொல்கிறார்.

அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை கேஸ் நமக்கு சாதகமாக முடிந்து விட்டது. சூப்பர் மார்க்கெட்டை திறந்து கொள்ளலாம் என்று மூர்த்திக்கு ஒரு போன் கால் வர எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். கடைசியாக தனம் இனிமே எல்லாத்தையும் ஒருத்தரை பார்க்க வேண்டாம் என்று சொல்லி மூர்த்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் பழைய கடையை பார்த்து கட்டும் ஜீவா சூப்பர் மார்க்கெட் அவனுடைய சொந்த உழைப்பில் ஆரம்பித்த ஹோட்டலை கவனித்து கட்டும் அவங்க அவங்க சம்பாதிக்கிறதை அவங்க அங்க பார்த்துக்கட்டும் எல்லோரும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கலாம் என்று சொல்ல முதலில் கதிர், ஜீவா இந்த முடிவுக்கு மறுப்பு சொல்ல பிறகு மூர்த்தியும் இதுதான் சரி என்று சொல்ல ஏற்றுக் கொள்கின்றனர். இப்படியாக இந்த சீரியலுக்கு சுபம் போட்டு முடித்துள்ளனர்.

pandian-stores serial last-episode-update
pandian-stores serial last-episode-update