Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிய வெங்கட் ..அவருக்கு பதில் யார் தெரியுமா? வைரலாகும் போட்டோ

pandian-stores serial jeeva-replacement-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாச கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட். இவர் தற்போது இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் நாயகனாக நடிக்க தொடங்கி உள்ளார். இதன் காரணமாக இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறி விடுவார் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.

தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நியூ ஜீவா என பதிவு செய்துள்ளார். இதனால் உண்மையாகவே ஜீவா வேடத்தில் நடித்து வந்த வெங்கட் இந்த சீரியலில் இருந்து வெளியேறி விட்டாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

pandian-stores serial jeeva-replacement-update
pandian-stores serial jeeva-replacement-update