Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய காரை வாங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை மீனா..! வைரலாகும் வீடியோ

Pandian Stores Serial Hema in New Car

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் ஹேமா ராஜ்குமார். இவர் முதலில் நியூஸ் ரீடராக அவரின் பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பின்புதான் விஜய் டிவியில் ஆபீஸ் என்ற நாடகத்தில் சைலண்ட் வில்லியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மெகா தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.இந்த கதாப்பாத்திரம் ஆனது சில நேரத்தில் காமெடியாகவும் சில நேரத்தில் வில்லியாகவும் கலந்த படி நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து ஹேமா எப்போதுமே ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிக் காட்டும் வீடியோக்களையும் அழகு சாதன பொருட்களைப் பற்றியும் வீடியோ எடுத்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது குடும்பத்துடன் சென்று கார் ஷோரூமில் புதிதாக கார் வாங்கும் வீடியோவை மகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளார்.