Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் .!! சீசன் 2 கதை இதுதான்

pandian stores serial exclusive updates viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சீரியல் எல்லாரையும் அரவணைத்துப் போகும் தியாகி ஆக தனம் இருந்து வருகிறார். மேலும் பிரிந்துள்ள குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்ந்து வரும் நிலையில் கண்ணன் மீண்டும் லஞ்சம் வாங்கி ஜெயிலுக்கு சென்றுள்ளார். இப்படியான நிலையில் வெகு விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அடுத்ததாக சீசன் 2 தொடங்க உள்ளது. இந்த இரண்டாவது சீசனின் கதை என்ன என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது எல்லோருக்கும் ஒரு ஒரு பெண் குழந்தை இருக்க தனத்திற்கு மட்டுமே பாண்டியன் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இப்படியான நிலையில் அடுத்த சீசனில் பாண்டியன் ஒரு சகோதரனாக முன் நின்று அனைத்து குடும்பத்தையும் வழிநடத்தி கொண்டு செல்லும் வகையில் கதை நகரும் என தகவல்கள் வெளியாகி விட்டது.

முதல் சீசனில் தனம் தியாகியாக இருப்பது போல இரண்டாவது சீசனில் அவரது மகன் பாண்டியன் தியாகியாக இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

pandian stores serial exclusive updates viral
pandian stores serial exclusive updates viral