தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த சீரியல் ரீமேக்காகி வருகிறது. அந்த வகையில் இந்தியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியா ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று முதல் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் வாரிசுகளை வைத்து இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. தமிழிலும் அதே போல் விரைவில் சீசன் 2 தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
View this post on Instagram

