தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
வம்சி இயக்கும் இந்த படத்தில் இருந்து பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் சூட்டிங் பார்ட்டி நடந்த சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகர்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரவிச்சந்திரன். செய்து வந்த மசாலா பிசினஸ் தோல்வி என பல அவமானங்களை கண்டு சின்னத்திரை, வெள்ளி திரைக்கு நடிக்க வந்த இவருக்கு வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால் சூட்டிங் சென்றபோது இயக்குனர் இவரை யாரை இறங்க பார்த்துவிட்டு கேரவனில் உட்கார சொல்லி இருக்கிறார். பிறகு உதவிய உணர்வர் வந்து உங்களை சார் கிளம்ப சொல்லிட்டார் உங்களது லுக் ரிச்சாக தெரிகிறது என கூறுகிறார். இப்படி அவங்களாக கூப்பிட்டு சம்பளம் முதற்கொண்டு எல்லாத்தையும் பேசிவிட்டு பிறகு இப்படி சொன்னதும் பிசினஸில் தோற்றதை விட பல மடங்கு அதிகமாக வலித்தது.
பிறகு நேராக இயக்குனரிடம் சென்று இதை நான் விஜய் சாரிடம் கொண்டு போகிறேன் என சொல்ல அவர் கையெடுத்து கும்பிட்டு இதை யாரிடம் எல்லாம் கொண்டு போக வேண்டாம் உங்களுக்கு இன்றைக்கான சம்பளம் வந்துவிடும் என கூறினார். கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் சரி என கிளம்பி வந்து விட்டேன். ஆனால் விஜய் சாரிடம் இந்த பிரச்சனையை கொண்டு போய் இருக்க வேண்டும் என இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

pandian-stores-ravichandran-about-varisu movie

