Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடிக்கு மாறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள். யார் தெரியுமா?

Pandian Stores Kannan Aishwarya Marriage Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் சீரியல் நடித்து வரும் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்த நிலையில் அவருடைய முகப்பரு பிரச்சனை காரணமாக சீரியல் இருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு ஐஸ்வர்யாவை மீண்டும் சீரியலுக்குள் கொண்டு வர கண்ணனாக நடித்து வரும் சரவணன் அதிக முயற்சிகள் மேற்கொண்டு வந்ததாக ஏற்கனவே தகவல் பரவியது.

அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன.

Pandian Stores Kannan Aishwarya Marriage Update

Pandian Stores Kannan Aishwarya Marriage Update