தி நகரில் ஷாப்பிங் போய் விலையைக் கேட்டு ஷாக் ஆகியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.
தமிழகத்தில் தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சென்னையில் திநகர் உஸ்மான் ரோட்டில் தொடங்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ்.
குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் ஆன ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் கிடைப்பதால் மக்கள் மத்தியில் இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
ஏற்கனவே வனிதா விஜயகுமார், விஜய் டிவி புகழ், பாலா, தீனா, வினோத், சரத், சிவாங்கி, சுனிதா, தீபா என பலர் ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் ஹேமா சதீஷ் அவர்கள் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
பொருட்களின் தரத்தை பார்த்துவிட்டு அதன் விலை கேட்டு வாயடைத்துப் போய்விட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

