கோமதிக்கு தெரிய வந்த உண்மை. அதிர்ச்சியில் பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் எபிசோட்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன‌.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு வீட்டிற்குள் செல்ல வடிவு ‌ எல்லாரும் இப்படி சாப விட்டுட்டு போறாங்களே என் பொண்ணு நெனச்சு அழுறதா இல்ல இந்த குடும்பத்தோட நிலைமையை நினைத்து அழுறதாய் என கலங்க பாண்டியன் அழாதமா என்று ஆறுதல் சொல்ல எங்க நிலைமையை பாருங்க என கதறுகிறார்.

மறுபக்கம் பாக்யாவுக்காக உதவு வந்த கோமதி எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய மீனா செந்திலுக்கு போன் செய்து கொண்டே இருக்க செந்தில் போனை எடுக்காமல் இருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து போன் செய்யும் செந்தில் இங்கு கல்யாண நின்னு போனதும் ராஜி வீட்டை விட்டு ஓடி போன விஷயத்தை சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். இந்த விஷயத்தை அம்மாகிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல என்று சொல்ல நானே சொல்கிறேன் என்று போனை வைக்கிறார்.

பிறகு மீனா கோமதியை அத்தை உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் வாங்க ரூமுக்கு போகலாம் என்று கூப்பிட இன்னும் வேலை இருக்குடி முடிச்சுட்டு போகலாம் என்று சொல்ல அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க நீங்க வாங்க என்று கூப்பிட சரி பாக்யாவிடம் சொல்லிட்டு வரேன் என்று கிளம்ப நீங்க இருங்க நானே சொல்லிட்டு வரேன் என்று மீனா பாக்யாவிடம் நாங்கள் ரூம் வரைக்கும் போய்ட்டு வரும் என சொல்லி கோமதியை கூட்டிக் கொண்டு கிளம்புகிறார். ‌

ரூமுக்கு வந்ததும் கதிர் மற்றும் கோமதியிடம் கல்யாணம் நின்னு போன விஷயத்தை ஓடி போன விஷயத்தை சொல்ல கோமதி அண்ணனோட குடும்பத்தின் நிலையை நினைத்து கலங்குகிறார்.

இங்கே அமிர்தா செழியன் மாமா கிட்ட பேசினீங்களா என்று கேட்க பேசிட்டு வரேன் என பாக்கியா உன்கிட்ட கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். தூக்கத்தில் இந்த ஈஸ்வரி முகத்தை கழுவ காரிலிருந்து கீழே இறங்க இது திருநெல்வேலி போற ரூட் மாதிரி இல்லையே என கேட்க ரோடு எல்லாம் இருக்கு அதனால இது வேற ரூட் என்ன சொல்லி சமாளிக்கிறார்.

இங்கே பாக்கியா சமையல் எல்லாம் முடித்து வண்டியில் ஏற்றும்போது பாயாசம் கீழே கொட்டி விடுகிறது. வண்டிக்காரர்கள் வெயிட் பண்ண முடியாது நேரமாயிடுச்சு என கிளம்பி விட இவர்கள் மீண்டும் பாயாசத்தை செய்து வேறொரு வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர்.

கோமதி பாண்டியனுக்கு போன் செய்து என்னங்க இப்படி பண்ணிட்டா என அழுது அண்ணன் குடும்பம் எப்படி இருக்கு என விசாரிக்கிறார். முத்துவேல் அந்த ராஜி எவன் கூட போயிருந்தாலும் அவளை தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்கடா என உத்தரவு போடுகிறார்.

கதிர் பழனிக்கு ஃபோன் போட்டு நீ ஒன்னும் கவலைப்படாத மாமா அந்த கண்ணு கூட தான் போய் இருக்கணும் அதுக்கு தான் வாய்ப்பு இருக்கு நான் என் பிரண்ட்ஸை விட்டு தேட சொல்றேன் என ஆறுதல் சொல்லி போனை வைக்கிறார்.

ராஜி ரூமுக்குள் இருக்க வெளியே போன கண்ணன் சாப்பாடு வாங்கிட்டு கொண்டு வருகிறார். அந்த ராஜி கையை பிடித்து நெருங்கி வர முயற்சி செய்ய ராஜி எழுந்து தள்ளி வருகிறார். நீ பழைய ராஜ்ய இல்லை என கண்ணன் சொல்ல நீயும் பழைய கண்ணனே இல்ல இங்க வந்ததுல இருந்து என்கிட்ட கோபப்பட்டுக்கிட்டே இருக்க என சொல்கிறார். கதவு திறந்திருக்க அந்த வழியாக வரும் பாக்கியா இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Pandian stores and baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

1 day ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago