Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தங்கலான் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த பா ரஞ்சித்

pa ranjith shared about thangalaan shooting update

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் திரைப்படங்களை இயக்கி பிரபல முன்னணி இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் கொடுத்திருக்கும் தங்கலான் அப்டேட் வைரலாகி வருகிறது.

அதில் அவர், தங்கலான் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி மீண்டும் தொடங்க இருப்பதாகவும் இன்னும் 12 நாள் ஷூட்டிங் மட்டுமே மீதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை முடித்த பிறகு சார்பட்டா 2 திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் கூறியிருக்கிறார். இவரது இந்த ஸ்பெஷல் அப்டேட்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியாடைய செய்துள்ளது.

pa ranjith shared about thangalaan shooting update
pa ranjith shared about thangalaan shooting update