Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் மாயா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

overall-salary-for-maya-in-bigg-boss 7 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் பரிசு தொகை 15 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு மற்றும் மாருதி நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

அர்ச்சனாவை தொடர்ந்து மணிச்சந்திரா இரண்டாம் இடம் பிடித்தார் மீதும் மாயாவுக்கு மூன்றாம் இடம் தான் கிடைத்தது. இரண்டாவது வாரத்திலேயே வெளியேற வேண்டிய மாயாவை மக்களின் ஓட்டுக்களை புறம் தள்ளி தள்ளி டிவி சேனல் தொடர்ந்து காப்பாற்றி இறுதி போட்டி வரை கொண்டு வந்தது.

106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த மாயா ஒரு நாளைக்கு ரூ 18,000 என மொத்தமாக 19 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தெரியவந்துள்ளது.

overall-salary-for-maya-in-bigg-boss 7 tamil
overall-salary-for-maya-in-bigg-boss 7 tamil