Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய ஜனனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

overall-salary-for-janani-in-bigg-boss 6

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களில் ஏடிகே மற்றும் மணிகண்டன் தான் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக ஜனனி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை சம்பளம் என கொடுக்கப்பட்டு வந்த நிலையில் மொத்தமாக கிட்டத்தட்ட 18 லட்சம் வரை அவர் சம்பளமாக பெற்று வெளியேறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

overall-salary-for-janani-in-bigg-boss 6
overall-salary-for-janani-in-bigg-boss 6