Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ஒன் 2 ஒன்”படத்தின் முதல் பாடலை வெளியிட்ட வெங்கட் பிரபு. வைரலாகும் பதிவு

one-2-one-first-single-released update

கே. திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் ‘One 2 One’ திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார். கலை இயக்கம் ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தை 24 IIRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.இப்படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நீது சந்த்ரா மற்றும் விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுதும் நிறைவடைந்த நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.