தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென ரவி மோகன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பங்களாவை கட்டி இருப்பதாகவும் அதற்காக வாங்கிய கடன் தவணையை சரியாக கட்டாத காரணத்தினால் அவரது வீட்டில் ஜப்தி நோட்டீசை வங்கி அதிகாரிகள் ஒட்டி இருக்கின்றனர்
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
