கமல் என்ன செய்தார்னு கேட்க யாருக்கும் தகுதி இல்லை- ரோபோ சங்கர் ஆவேசம்

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர், “கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் வெளியாகும் திரைப்படத்தை பிரமாண்ட விழாவாக நான் எடுத்து நடத்த போகிறேன். இந்தியன் 2 படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். கமல்ஹாசன் நம்ம ஊரில் இருக்க வேண்டிய ஆளே இல்லை. எல்லா விஷயத்திலையும் நுணுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார்” என்று பேசினார்.

மேலும், ‘லியோ’ படத்தில் கமல்ஹாசன் குரல் இடம்பெற்றதால் வந்த ட்ரோல் குறித்த கேள்விக்கு, “கமல் என்ன கிழிச்சாருனு கேட்க யாருக்கும் தகுதி இல்லை. ‘லியோ’ படம் பார்க்கும் போது கடைசியாக கமல் குரல் வரும்போது திரையரங்கம் அதிருகிறது அதுக்கு மேல் என்ன சொல்ல. லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் மிகப்பெரிய பக்தன்” என்று பேசினார்.

Suresh

Recent Posts

ரவி மோகன் வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி…

2 hours ago

சர்க்கார் 2 படம் குறித்து வெளியான செம அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…

4 hours ago

ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த உதவி,குவியும் பாராட்டு..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத்…

4 hours ago

விஜயா சொன்ன வார்த்தை, அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய…

7 hours ago

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினியின் கேள்விக்கு விஜியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு…

7 hours ago

முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

22 hours ago