Nira Tamil Short Film
தமிழில் இளம் படைப்பாளிகளின், நல்ல படைப்புகளை தேடிக்கொண்டு வந்து சேர்க்கும் சினிமா காலண்டரின் அடுத்த வெளியீடாக வெளியாகியிருக்கும், ரொமான்ஸ் டிராமா குறும்படம் “நிரா”.
மிரர் மைண்ட் புரடக்சன் சார்பில் தினேஷ் பிரசாத் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் மாதேவன், ஷாலி நிவகேஷ், ஆஷிகா யாஷ் நடித்துள்ளனர்.
ஒருவருக்கு திருமணத்திற்கு பிறகு காதல் வராதா ? அப்படி வந்தால் அதை இணையிடம் எப்படி தெரிவிப்பது?, இந்த மையப்புள்ளியில் சுழலும் கதையில், இளைஞர்களின் உறவுச்சிக்கலை பேசும் குறும்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதிய இளம் திறமையாளர்களின் முயற்சியில் சென்னையில் ஒரே நாளில் இக்குறும்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் முடித்து, அசத்தியுள்ளது படக்குழு. மேலும் தமிழில் புது முயற்சியாக முதன்முறையாக டால்ஃபி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டத்தில் இக்குறும்படத்தின் ஒலியமைப்பு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் டால்ஃபி அட்மாஸ் வசதி இல்லாத காரணத்தால் 5.1 சவுட்ண்ட் சிஸ்டத்தில் இக்குறும்படம் காணக்கிடைக்கிறது.
இன்றைய நவீன உலகில் இளைஞர்களின் அடிப்படை பிரச்சனையாக இருக்கும் உறவுச்சிக்கல்களையும் ஒரு விசயத்தை அணுகும் முறையில் உள்ள தயக்கத்தையும், அழுத்தமாக பேசுகிறது இப்படம். சினிமா காலண்டர் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறும்படத்தின் கருவையும், படத்தின் நடிகர்களின் நடிப்பு மற்றும் உருவாக்கத்தை குறிப்பிட்டு, ரசிகர்கள் இப்படத்தினை பாராட்டி வருகின்றனர்.
தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து இயக்கம் : தினேஷ் பிரசாத்
நடிப்பு : மாதவன் ஷாலி நிவேகாஸ், ஆஷிகா யாஷ்
ஒளிப்பதிவாளர்: மொரிஷ் பூஷன்
எடிட்டர்: சிவசுந்தர் நந்தா
இசை: அரிஷ்
DI-கலரிஸ்ட்: வசந்த் S கார்த்திக்
SFX,
ஒலி வடிவமைப்பு & ஒலிக்கலவை: ஹரி பிரசாத் , பெப்பிள்ஸ்
கலை இயக்கம்: ஹபீஸ்
வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட் : வர்ஷா நித்யானந்தம்
போஸ்ட் புரடக்சன்: The Whackostudio விளம்பர வடிவமைப்பு: NXT Genstudio, ரஞ்சித்
மோஷன் கிராபிக்ஸ்: பாசித் சையத்
வசனம்: முகுந்தன்
தயாரிப்பு நிர்வாகி: சாய் நரேன், ஆதித்யா R மேகநாதன்
தயாரிப்பு: மிரர் மைண்ட் புரடக்சன்
வெளியீடு: சினிமா காலண்டர்.
“நிரா” குறும்படத்தை இப்போது சினிமா காலண்டர் யூடியூப் தளத்தில் கண்டுகளியுங்கள்.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…