தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளனர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் சூர்யா ஜோதிகா மற்றும் இயக்குனர் மீது வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் நீலகிரியை சார்ந்த பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யாவை காணவில்லை வயது ஏழு கழுதை வயசு ஆகிறது, ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து சூர்யாவை காணவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்.
பிடித்த வார்த்தை அதிமுக ஆட்சி வரை நீதி நேர்மை நியாயம் பிடிக்காத வார்த்தை நீட், வன்னியர்கள், இந்தி. ஆனால் இந்தியில் எடுக்க மட்டும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
