nilai marandhavan movie review
பகத் பாசிலின் தந்தை வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார். தனது தம்பியுடன் வாழ்ந்து வரும் பகத் அவரை கஷ்டப்பட்டு வளர்த்தெடுக்கிறார். மனநலம் பாதிப்படைந்து விட்ட தம்பியை அவர் காப்பாற்ற போராடுகிறார். ஆனால் அவனும் ஒருநாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் வேலையில்லாமல் சுய முன்னேற்ற வகுப்புகளுக்கு சென்று தனது பேச்சுத்திறமையால் ஒரு அடையாளத்தைப் பெறுகிறார்.
இதன்மூலம் அவருக்கு ஒரு கிறிஸ்துவ அமைப்பில் மதபோதகம் செய்ய வாய்ப்புக் கிடைக்கிறது. மேடையில் அவன் உணர்ச்சிவசமாக பேசுவதைக் கண்டு, பொய்களை நம்பும் கிறிஸ்தவ மக்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். இதனால் அவரின் மதமாற்றம் செய்யும் மத போதகக் கூட்டம் கோடிகளில் புறள்கிரது. ஒரு கட்டத்தில் மனம் மாறும் நாயகன் பகத் பாசில், எப்படி அந்தக் கூட்டத்தினை பொது மக்களுக்கு காட்டிக்கொடுக்கிறார்? எதனால் இவர் மனம் திரும்புகிறார்? இதனால் எப்படி பாதிப்புக்குள் ஆகிறார்கள்? என்பதே மீதிகதை.
மலையாளத்தில் இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியான ட்ரான்ஸ் என்ற படத்தை அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஏழைத்தம்பியை காப்பாற்ற முடியாமல் கலங்கும் இடத்திலும், சுயமுன்னேற்ற வழிகாட்டியாக பணம் சம்பாதிக்க முடியாமல் திணறுவதும், கிறிஸ்துவர்களின் பெயரில் அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலும் அப்பட்டமாக காட்டப்பட்டிருப்பது ஆச்சரியம்.
பஹத் பாசிலின் எதார்த்த நடிப்பால் நம்மை வசப்படுத்துகிறார். மதபோதகராக நடித்திருக்கும் பகத், அவர்கள் செய்யும் தவறுகளை அவரின் நடிப்பின் மூலம் எதார்த்தமாக வெளிபடுத்தியிருக்கிறார். நஸ்ரியாவின் அழகான நடிப்பு அனைவரின் கைத்தட்டல்களையும் பெறுகிறது.
இயக்குனர் கவுதம் மேனனும், அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பன் வினோத்தும் நடித்திருக்கிறார்கள். மலையாள நடிகர் விநாயகன் நெஞ்சில் நிறைந்த பாத்திரத்தில் வந்து கண்கலங்க வைத்திருக்கிறார். காலம் கடந்து தமிழுக்கு வந்திருந்தாலும் காலத்தால் நிலைக்கும் படம் நிலை மறந்தவன்.
ஜாக்ஸன் விஜயனின் இசை அமல் நீராட் ஒளிப்பதிவு இரண்டும் படத்தை தாங்கிப்பிடிக்கின்றன. வின்செண்ட் வடக்கன் கதை துணிச்சலுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
நிலை மறந்தவன் – நிலையானவன்
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…