நடிகைகள் பலர் சினிமா வட்டாரத்தில் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே பெரிளவிலான வாய்ப்பையும், படங்களையும் பெறுகிறார்கள். சிலர் படங்களில் நடித்து வந்தாலும் திருமணம் போன்ற காரணங்களால் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிடுவதுண்டு.
தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவின் சகோதரர் மகளான நடிகை நிகாரிகா சினிமாவுக்கு பிரேக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இவருக்கும் JV Chaitanya என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் டிசம்பரில் அவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.
நிகாரிகா நடிகர் அசோக் செல்வனுடன் தமிழில் ஒப்பந்தமாகியிருந்த படத்தில் அவருக்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷை நடிக்க வைக்கிறார்களாம். படத்தை முடித்துக்கொடுத்துவிட வேண்டும் என்றிருந்தபோது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் போனதால் இப்படி ஒரு முடிவாம்.
தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நிகாரிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…