Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

New update on Vijay's 'Jananayagan'

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு 9-ந்தேதி திரைக்கு வருகிறது.

இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் 27-ந்தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் டிரெய்லர் வருகிற புத்தாண்டு 1-ந்தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ‘ஜன நாயகன்’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவுகள் தொடங்கிய ஒரே நாளில் 12,700 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 150 கோடியில் பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

New update on Vijay's 'Jananayagan'
New update on Vijay’s ‘Jananayagan’