Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..அடுத்தடுத்து வெளியாக போகும் புதிய சீரியல்கள்

new-serials-launch-in-tamil-chinnathirai update

தமிழ் சின்னத்திரையில் வெகு விரைவில் மூன்று சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் இருந்து வருகின்றன.

இந்த தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் இல்லாமல் மேலும் 3 சீரியல்கள் களமிறங்க உள்ளன. ஆமாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு நளதமயந்தி மற்றும் இரவு 7 மணிக்கு சந்தியா ராகம் என இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன.

இவற்றை தொடர்ந்து சன் டிவியில் வெகு விரைவில் சிங்க பெண்ணே என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் காரணமாக இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

new-serials-launch-in-tamil-chinnathirai update
new-serials-launch-in-tamil-chinnathirai update