New poster of the film “Patriot” released
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்…
மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம், ‘பேட்ரியாட்’. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களுக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, குஞ்சாக்கோ போபன், கிரேஸ் ஆண்டனி, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா, பகத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. நயன்தாராவின் போஸ்டரில், அவர் முகம் மட்டும் ஆக்ரோஷமான தோற்றத்தில் இருக்கிறது. இப்போஸ்டர்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
முன்னதாக, நயன்தாரா தெலுங்கில் சிரஞ்சீவியுடன் மீண்டும் இணைந்து நடித்த ‘மனசங்கர குரு’ படம் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…