Never Saw Lord Rama or Krishna; But I See Modi – Telugu Actor
இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் “கில்லி”, “பத்ரி” உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானவர்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:
“நான் ராமரை பார்த்ததில்லை, கிருஷ்ணரை பார்த்ததில்லை, ஆதி சங்கரரை பார்த்ததில்லை, விவேகானந்தரை பார்த்ததில்லை. நம்மால் அவர்களை நேரில் காண முடியாது. ஆனால், அந்த மகான்களின் உருவமாக விளங்கும் மோடி அவர்களை நான் பார்த்தேன். அவரை கட்டியணைத்தேன், அவருடன் கைக்குலுக்கினேன். என் பிறப்பு ஆசீர்வதிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
தனிகெல்லா பரணியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…