கதாநாயகனான் ஆகாஷ் முரளி மற்றும் நாயகியான அதிதி ஷங்கர் இருவரும் கல்லூரி பருவத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். இவர்களிடையே அவ்வப்போது சண்டைகளும் வந்து கொண்டு இருக்கிறது. ஆகாஷ் மற்றும் அதிதி இடையே நிறைய மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் ஏற்படுவதால் இவர்களின் காதல் முறி. இந்த நிலையில் அதிதிக்கு போர்ச்சுக்கல் நாட்டில் வேலை கிடைக்கிறது இதனால் அவர் அங்கு செல்கிறார் சில வருடங்களுக்கு பிறகு ஆகாஷ் முரளிக்கு ஒரு செய்தி கிடைக்கிறது அதிதி போர்ச்சுக்களில் உள்ள பெரிய தொழிலதிபரை கொலை செய்த குற்றத்திற்காக ஆள் சிறையில் இருக்கிறார் என்று. இதை தெரிந்து கொண்ட அவர் அதிதியை காப்பாற்ற போர்ச்சுக்கல் செல்கிறார் உண்மையில் அதிதி தொழிலதிபரை கொலை செய்தாரா? தொழிலதிபருக்கும் அதிதிக்கும் என்ன சம்பந்தம்? அதிதியை காப்பாற்றினாரா ஆகாஷ் முரளி?இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆகாஷ் முரளி. முயன்ற அளவு அவரின் பங்கை சிறப்பாக நடித்து வெளிப்படுத்தியுள்ளார். காதல், எமோஷன் அலுகை என நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.அதிதி துருதுருவென நடித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.அதேபோல் நடிகர் ராஜா சைலன்டாக வில்லத்தனம் செய்திருக்கிறார். முக்கியமான ரோலில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் குஷ்பூ தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். கல்கி கோச்சின் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
ரொமாண்டிக், திரில்லர் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கியுள்ளார் விஷ்ணு வரதன். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். விஷ்ணு வரதன் அவரது பாணியில் ஒரு காதல் கதையை இயக்கியுள்ளார் விஷ்ணு வரதன். கிளைமாக்ஸ் வரும் ட்விஸ்ட் பாராட்டிற்குறியவை.
யுவன் இசையில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
கேமரான் எரிக்கின் ஒளிப்பதிவு மிகவும் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார்.
XB Film Creators தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…