தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார். தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படங்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமாரின் மனைவி மற்றும் மகன் உடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருடைய மனைவி பெயர் மோனிஷா. இவரின் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே இருப்பதாக புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் நெல்சன் திலீப்குமாருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கானா எனவும் ஆச்சரியத்தோடு ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
