Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் புதிய படம்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

Nelson DhilipKumar in Upcoming Movie Details

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். விஜய் டிவியில் பணியாற்றி வந்த இவர் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமானார். இதற்கு முன்னதாக சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் பாதியில் இந்த படம் கைவிடப்பட்டது.

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். டார்க் காமெடி திரைப்படமாக வெளியான இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின்னர் தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. இந்த படத்தை முடித்த கையோடு நெல்சன் திலீப் குமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆமாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தலைவர் 169வது அல்லது 170 ஆவது படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nelson DhilipKumar in Upcoming Movie Details
Nelson DhilipKumar in Upcoming Movie Details