தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தினால் மோசமான விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் படத்தின் விமர்சனங்கள் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் பேசியுள்ளார். நாம் ஒன்றை எதிர்பார்த்து படத்தை எடுத்தோம் ஆனால் அது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. சரி விடுங்க அடுத்த படத்தை அவர்களுக்கு பிடித்தாற்போல எடுத்து விடலாம் என கூறியுள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தலைவர் படத்தையாவது நல்லபடியாக கொடுங்க என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


