Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நோக்கி என் பயணம் இல்லை”: நயன்தாரா

nayanthara-speech-latest viral

“இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது, \”திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அதனால் முதல் நாள் காட்சியெல்லாம் பார்க்க தைரியம் இருக்காது. எப்போதும் முதல் நாள் இரவுக் காட்சி பார்ப்பேன். மேலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னாலே திட்டுகிறார்கள். நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லையா? இல்லை பெண் என்பதால் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்பதை நோக்கி என் பயணம் இல்லை\” என்று கூறினார்.”,

nayanthara-speech-latest viral
nayanthara-speech-latest viral